**தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!**
Monday, July 11, 2016
Saturday, March 26, 2011
காதல் செய்தால்
உனக்குள்ளேயே பேசிக்கொள்வாய்
ஊமையாய் இருக்கவும் செய்வாய்
இரவு அழகாகும்
காதலைச் சொல்ல
கண்ணாடிமுன் தினமும் ஒத்திகை செய்வாய்
வார்த்தைகள் வாய்க்குள்ளே மரித்துபோகும்
உன்னக்குள்ளே வாதங்கள் நடக்கும்
உன்னை நீயே திட்டவும் செய்வாய்
கனவிலும் காதலி
நினைவிலும் காதலி
தூணிலும் துரும்பிலும் இருப்பான்
கடவுள்
காதலி
கண்பட்ட இடத்திலெல்லாம் இருப்பாள்
உனக்கு
இதயமே வெளியே துடிப்பதாய் உணர்வாய்
இரவு இன்னும் கொஞ்சம் நீளாதா?
அவளை பார்க்கும் நொடி உறையாத?எனநினைப்பாய்
வாலிகளை வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளும்
இன்னொரு இயேசுவாக நீ இருப்பாய்
ஆறு நாட்கள் தேவையில்லை
அரை நொடியில்
உன்னக்குள்ளே
ஒரு உலகம் சிருஷ்டிப்பாய்
அவளை பார்க்கவே
ஆயுளை கரைப்பாய்
விட்டில் பூச்சிபோல் அவள்
விழியில் விழுந்து சாகத்துடிப்பாய்
ஒற்றை வரியெழுதி
ஒருநூரு கடிதம் கிழிப்பாய்
இதுவே அழகிய வலி என்பாய்
இதில்லாமல் காதல் ஏதென்பாய்
இதுவே காதல் என்பாய்
அவளின் இதயம்......
இருட்டில் வரையப்பட்ட
ஓவியம் .......
அவளின் இதயம்.....,
கடைசிவரை என்னால்
கண்டுகொள்ளவே
முடியவில்லை ....!!!!
I MISS U DAAAA
பூத்தாலும் வாசம் வீசாது
வான் நட்சத்திரங்கள்
அதுபோலவே நம் காதலும்
இதயத்தில் பூத்தும் வாழ்க்கை
என்னும் வாசம் வீசவில்லை ....
பலரின் வாழ்த்துகளுடன் நான்
போனேன் இன்னொரு வீட்டுக்கு
வாழ்த்தியோருக்கு என்ன தெரியும்
உன்னை பிரிந்த வேதனையுடன்
நான் செல்கிறேன் என்று ........
எந்தன் உந்தன் இதயத்தின்
துடிப்பு மட்டும் ஆறுதல்
சொன்னது கலங்காதே
மறு ஜென்மத்தில் சந்திப்போம்
அப்போது சேர்ந்து வாழ்வோம்
என்று .......
நடைமுறையில் இல்லாத போதும்
நம்பிக்கையோடு விடைபெற்றேன்
ஆனால் உள்ளம் மட்டும் எப்போதும்
உன் நினைவுகளுடனேயே ...... I MISS UDAAAA
Friday, March 18, 2011
Subscribe to:
Posts (Atom)




