Saturday, December 11, 2010

 
வண்டுகளே...
தேனுக்காக மட்டும்
பூக்களை விரும்பாதீர்
பூவுக்கும் மென்மையான
இதயம் உண்டு என்பதை
...மறந்து விடாதீர்!!

Tuesday, December 7, 2010

வெற்றி

தொட்டுவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை..அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை

பெண்

 
பெண் சாதிக்க பிறந்தவள்
இல்லை என்றாலும்
நேசிக்க பிறந்தவள் !
பிறந்த நொடியில் இருந்து
பெற்றோர்களை நேசித்து .....
வளந்த பிறகு
உடன் பிறப்புகளை நேசித்து....
வாழக்கையை வாழ கற்று கொண்டபொழுதில்
கல்வியையும்,நண்பர்களையும் நேசித்து....
திருமணம் முடிந்ததும்
கணவனையும்,புகுந்த வீட்டை நேசித்து...
அம்மா என்ற இடத்தை
அடைந்த பொழுதில்
பிள்ளைகளை நேசித்து....
முதுமையில்
உலகத்தையும்,தனிமையும் நேசித்து...

யார் சொன்னது ?
பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள்
இல்லையென்று
பெண்கள் நேசிக்க தெரிந்தவர்கள்
பெண்கள் நேசித்து வாழ்ந்தது
எல்லாம் சாதனை தான்
பெண்கள் வாழக்கையை
ஒரு சாதனை பயணம் ........
இதில் எங்கு சென்று தனியாக சாதிக்க இந்த உலகத்தில் ........

வேண்டாம் மன்னிப்பு


நான் செய்யும் தவறுகளுக்கு என்றும்
மன்னிப்பு வேண்டாம்
தெரியாமல் செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து தூக்கம் போனது !
தெரிந்தே செய்த தவறுக்கு
மன்னிப்பு கிடைத்தால்
அன்றிலிருந்து வாழ்க்கை போனது!
நான் செய்த நன்மைகளுக்கும்
செய்யாத தீமைகளுக்கும் சேர்த்து
தண்டனைகளாகவே கொடுத்துவிடுங்கள்
எனக்கு மன்னிப்பு வேண்டாம்
அதன் வலி எனக்கு உறைக்காது..........

Friday, November 19, 2010


அவள் இதயம் போலசிற்பியே நிறுத்தும்
உம் வேலையை!
செதுக்கியது போதும்
அழகுப்பெண் சிற்பத்தை!

உயிரோடு உலகம்
பெண் சிற்பங்கள்
எங்கள் கனவோடு
விளையாடி
இதயத்தை செதுக்கியது
போதாதென்று

நீ

சிலையாகச் செதுக்கி
நிலையான வேதனையை
எங்கள் விழிகளுக்கு தராதே!

அது
கல்லாகவே
இருந்துவிட்டுப் போகட்டுமே

அவர்கள்
இதயங்களைப் போலவே!

உன் நினைவில்.....
உன்னை
நினைத்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என்னை நான்
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்

உன்
நினைவுகள்
என் கனவை கடத்தி
உன்னை
பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது

கரையும் நொடிகளில் - உன்னால்
காணாமல் போகிறேன்
உன் கனவுகள் மட்டுமே
என் மனம் சேர்கிறது

உன்
பெயர் பொதிந்த காகிதங்கள்
என் காதலின் பொக்கிஷங்களாய்
சேகரிக்கபடுகிறது

வார்த்தையைக் கூட
மௌனமாக்கியவளே
இந்த காகிதமாவது
உன்னோடு பேசட்டும்
உனக்காக
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தின் ஓசைகளை
நீ உணர !


சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்
நட்பு.