Friday, March 18, 2011

அவள் வீட்டு வாசலில்


அவள் வீட்டு வாசலில்
என்னை கோலமாகபோட சொல்லுங்கள்...
என் மீது அவள்பார்வை தான்
படவில்லைபாதங்கலாவது பதியட்டும்......

உயரோடு

உயரோடு கலந்தவளே
என் உயிர் ஓடு துடிக்குதடி உன் காதலால்
நான் கண் இமைப்பதில்லை
அந்த இமைக்கும் தருணம்
நீ என்னை பார்த்தால்
நீ பார்க்கும் பொது பார்க்காமல் பொய் விடுவேனோ
என்ற பயத்தில்

காதல்



காதலின் மேல் எத்தனை காதல்
கண்களால் தொடங்கி
இதயத்தில் நடந்து
உயரோடு போவது காதல்

உன் இதழ்கள் பேசும்

உன் இதழ்கள் பேசும் வார்த்தைகளை விட, உன் விழிகள் பேசும் வார்த்தைகளே சத்தமாக கேட்கிறது.. எனக்கு மட்டும்

Wednesday, March 9, 2011

உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்!
புரிகின்ற வரை காதலும்
ஒரு புதிர் தான்!,,,

Tuesday, February 1, 2011

நீ விரும்பும் இதயம்


நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்க்கும்... ஆனால் உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்.....

உன் நினைவில்.....


உன்னை
நினைத்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என்னை நான்
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்

உன்
நினைவுகள்
என் கனவை கடத்தி
உன்னை
பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது

கரையும் நொடிகளில் - உன்னால்
காணாமல் போகிறேன்
உன் கனவுகள் மட்டுமே
என் மனம் சேர்கிறது

உன்
பெயர் பொதிந்த காகிதங்கள்
என் காதலின் பொக்கிஷங்களாய்
சேகரிக்கபடுகிறது

வார்த்தையைக் கூட
மௌனமாக்கியவளே
இந்த காகிதமாவது
உன்னோடு பேசட்டும்
உனக்காக
துடித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தின் ஓசைகளை
நீ உணர !